1 முதல் 12-ஆம் வகுப்புவரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சக்திராஜ் என்பவர் சென்னை மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், டிஎன்பிஎஸ்சி கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி துணை ஆட்சியர் உள்ளிட்ட 181 பணியிடங்களுக்கான தேர்வுக்கு அழைப்பு விடுத்தது.
அதில், தொலைநிலை கல்வியில் தமிழில் பயின்றவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் முழுமையாக தமிழ்வழியில் படித்த எனக்கு வழங்கப்படவில்லை இடஒதுக்கீடு என கூறினார். எனவே 1 முதல் 12ம் வகுப்பு வரை ஆங்கில வழியில் படித்துவிட்டு இடஒதுக்கீடு பெற தொலைநிலை கல்வியில் பயின்று இட ஒதுக்கீட்டை பெறுகிறார்கள்.
இந்த இடஒதுக்கீட்டை முழுமையாக தமிழ்வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே தர வேண்டும் என மனுதாரர் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 1 முதல் 12-ஆம் வகுப்புவரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளி, கல்லூரி அல்லது தொழில்துறை படிப்பு ஆகிய எல்லாவற்றிற்கும் இந்த உத்தரவு பொருந்தும் என தெரிவித்தார்.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…
துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு…
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…