ஒபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு – திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு

Published by
Venu

இட ஒதுக்கீடு வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் சரியான முறையை பின்பற்றவில்லை என கூறி தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 % இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி திமுக, அதிமுக, பாமக, கம்யூனிஸ்ட்கள், மதிமுக, காங்கிரஸ், விசிக மற்றும் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம்,ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிடாது. மாநில அரசின் கொள்கை என்ற அடிப்படையில் தமிழகம் தொடர்பான இடஒதுக்கீட்டிற்கு சென்னை உயர்நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் கூறியது. இதன் பின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது.இந்த வழக்கு நேற்று  விசாரணைக்கு வந்த நிலையில்,  அப்பொழுது இந்திய மருத்துவ கவுன்சிளின் வாதத்தை ஏற்க முடியாது எனவும், மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தர சட்டம் இயற்றலாமென தெரிவித்தது. மேலும் மத்திய கல்வி நிலையங்கள் அல்லாத நிலையங்களிலும் ஒபிசி இட ஒதுக்கீடு வழங்க சட்ட ரிதியாகவோ அரசியலமைப்பு ரீதியாகவோ எவ்வித தடையும் இல்லை என தெரிவித்தது. இது தொடர்பாக 3 மாதத்தில் முடிவு எடுக்க வேண்டும் எனவும், இட ஒதுக்கீடு வழங்க சட்டரீதியாக தடை இல்லை என தீர்ப்பளித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

இந்நிலையில்  ஒபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக யாரேனும் மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறபிக்க கூடாது என்று  திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Published by
Venu

Recent Posts

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…

1 hour ago

மேற்கு வங்கம்.. 6 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி.!

மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…

2 hours ago

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி! “மக்களுக்கு நன்றி”..பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த  நிலையில்,…

2 hours ago

பீகார் இடைத்தேர்தல் : 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி!

பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…

3 hours ago

“நாடாளுமன்றத்தில் வயநாட்டு மக்களின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – பிரியங்கா காந்தி!

கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…

3 hours ago

“என்ன நண்பா ஹப்பியா”… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…

3 hours ago