திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுபட்டி கிராமத்தை சார்ந்தவர் ஆரோக்கியராஜ் , மேரி.இவர்களின் குழந்தை சுர்ஜித் .இவர் நேற்று மாலை 5.40 மணி அளவில் வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டு இருந்தார்.அப்போது அங்கு இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார்.
சுர்ஜித் 27அடி ஆழத்தில் சிக்கி கொண்ட நிலையில் சுர்ஜித்திற்கு சுவாசிக்க சிலிண்டர்கள் மூலமாக தொடர்ந்து ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு வந்தது.முதலில் பக்கவாட்டில் ஜே.சி.பி இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டது. 15 அடி தோண்டியபோது பாறை இருந்ததால் தோண்டும் பணி நிறுத்தப்பட்டது.
இது தொடர்ந்து மதுரையை சேர்ந்த மணிகண்டன் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கருவி மூலம் சிறுவனை மீட்க முயன்றனர். நீண்ட நேரமாக முயற்சி செய்து சிறுவனின் ஒருகையில் கயிறு மாட்டிய நிலையில் , இரண்டாவது கையிலும் கயிறு மாட்டினார்.ஆனால் ஆழ்துளை கிணற்றில் இருந்த ஈரப்பதம் காரணமாக இரண்டாவது கையில் இருந்து கயிறு மூன்று முறை கயிறு விலகியது. பின்னர் தொடர்ந்து செய்த முயற்சி செய்தனர்.ஆனால் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.
பின்னர் இரவு ஒரு மணி அளவில் 5 ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் மீண்டும் பக்கவாட்டில் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் அது நிறுத்தப்பட்டு ஐஐடியில் இருந்து ஒரு குழு நவீன கருவிகள் மூலம் விரைந்து வந்தனர்.
அப்போது 27 அடியில் இருந்த சுர்ஜித் 68 ஆழத்திற்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாக போராடி ஐஐடி குழுவின் முயற்சியும் தோல்வியில் முடிந்தது.ஐஐடி குழுவினர் கொண்டு வந்த நவீன கருவியின் விட்டம் பெரிதாக இருப்பதால் அதன் விட்டத்தைக் குறைத்தும் சிறுவன் சுர்ஜித் மீட்கும் பணியில் ஈடுபட்டு தொடர்ந்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து தற்போது சென்னையில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப்படையினர் காலை 8 மணிக்கு நடுக்கோட்டுக்கு வந்து விடுவார்கள் என திருச்சி மாவட்ட மாவட்ட ஆட்சியர் சிவராஜ் கூறியுள்ளார். இந்த மீட்பு பணியில் அமைச்சர் விஜயபாஸ்கர் , அமைச்சர் வெல்லமண்டி மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவராஜ் ஆகியோர் உள்ளனர்.
நேற்று மாலை மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் தவறி சுர்ஜித் 13 மணி நேரத்திற்கு மேலாக ஆழ்துளை கிணற்றில் உள்ளார்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…