விடிய விடிய நடக்கும் மீட்பு பணி..! 27அடியில் இருந்த 68 அடிக்கு சென்ற குழந்தை ..! சிக்கி தவிக்கும் சிறுவன்..!

Default Image

திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுபட்டி கிராமத்தை சார்ந்தவர் ஆரோக்கியராஜ் , மேரி.இவர்களின் குழந்தை சுர்ஜித் .இவர் நேற்று  மாலை 5.40 மணி அளவில் வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டு இருந்தார்.அப்போது அங்கு இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார்.
சுர்ஜித் 27அடி ஆழத்தில் சிக்கி கொண்ட நிலையில் சுர்ஜித்திற்கு சுவாசிக்க சிலிண்டர்கள் மூலமாக தொடர்ந்து ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு வந்தது.முதலில் பக்கவாட்டில் ஜே.சி.பி இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டது. 15 அடி தோண்டியபோது பாறை  இருந்ததால் தோண்டும் பணி நிறுத்தப்பட்டது.
இது தொடர்ந்து மதுரையை சேர்ந்த மணிகண்டன் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கருவி மூலம் சிறுவனை மீட்க முயன்றனர். நீண்ட நேரமாக  முயற்சி செய்து சிறுவனின் ஒருகையில் கயிறு மாட்டிய நிலையில் , இரண்டாவது கையிலும்  கயிறு மாட்டினார்.ஆனால் ஆழ்துளை கிணற்றில் இருந்த ஈரப்பதம் காரணமாக இரண்டாவது கையில் இருந்து கயிறு மூன்று முறை கயிறு விலகியது. பின்னர் தொடர்ந்து செய்த முயற்சி செய்தனர்.ஆனால் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.
பின்னர் இரவு ஒரு மணி அளவில் 5 ஜே.சி.பி  இயந்திரங்கள் மூலம் மீண்டும் பக்கவாட்டில் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் அது நிறுத்தப்பட்டு ஐஐடியில் இருந்து ஒரு குழு நவீன கருவிகள் மூலம் விரைந்து வந்தனர்.
அப்போது 27 அடியில் இருந்த சுர்ஜித் 68 ஆழத்திற்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாக போராடி ஐஐடி குழுவின் முயற்சியும் தோல்வியில் முடிந்தது.ஐஐடி குழுவினர் கொண்டு வந்த நவீன கருவியின் விட்டம் பெரிதாக இருப்பதால் அதன் விட்டத்தைக் குறைத்தும் சிறுவன் சுர்ஜித் மீட்கும் பணியில் ஈடுபட்டு தொடர்ந்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து தற்போது சென்னையில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப்படையினர் காலை 8 மணிக்கு நடுக்கோட்டுக்கு வந்து விடுவார்கள் என திருச்சி மாவட்ட மாவட்ட ஆட்சியர் சிவராஜ் கூறியுள்ளார். இந்த மீட்பு பணியில் அமைச்சர் விஜயபாஸ்கர் , அமைச்சர் வெல்லமண்டி மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவராஜ் ஆகியோர் உள்ளனர்.
நேற்று மாலை மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் தவறி சுர்ஜித் 13 மணி நேரத்திற்கு மேலாக ஆழ்துளை கிணற்றில் உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்