தமிழகத்தில் தியேட்டர்களை திறக்க முதல்வரிடம் தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் சில திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்நிலையில் தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க உத்தரவிடுமாறுதியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர்திருப்பூர்சுப்ரமணியம் கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை தலைமைச்செய்யலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டானிடம் கொரோனா நிவாரண நிதியாக 50 லட்சத்தைதியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர்திருப்பூர்சுப்ரமணியம், தியேட்டர் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் வழங்கினர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தசங்க தலைவர்திருப்பூர்சுப்ரமணியம் கூறியது ” தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளோம். தியேட்டர்கள் திறப்பது தொடர்பாக முதல்வர் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.