கோவையிலிருந்து டெல்லி மற்றும் துபாய்க்கு விமான சேவை தொடங்க கோரிக்கை-அமைச்சர் வேலுமணி
கோவையிலிருந்து டெல்லி மற்றும் துபாய்க்கு விமான சேவை தொடங்க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்தார்.இதன் பின்னர் அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், மழைநீர் சேமிப்பு திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது .சென்னையில் உள்ள 210 ஏரிகள் மேம்படுத்தப்படும், கூடுதலாக 1 டிஎம்சி நீரை சேமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்தியாவிலேயே சிறப்பான மாநிலங்களுக்கான விருதுகளை அதிகம் பெற்றுள்ளோம்.
கோவையிலிருந்து டெல்லி மற்றும் துபாய்க்கு விமான சேவை தொடங்க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மீது நிர்மலா சீதாராமன் அதிக அக்கறையோடு உள்ளார் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.