தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக்கல்லூரிகள் தொடங்க வேண்டும் என கோரிக்கை-அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக்கல்லூரிகள் தொடங்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் உடன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்தார்.மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனை சந்தித்த பின் தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்,தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக்கல்லூரிகள் தொடங்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது .
புதிதாக சுகாதார மையங்கள் அமைக்கவும் மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.தமிழக அரசின் கோரிக்கை குறித்து பரிசீலனை செய்வதாக மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.