தற்போதைய தமிழக சட்டப்பேரவையின் காலம் வருகின்ற மே 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.இதனால் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உள்ளிட்ட 8 அதிகாரிகள் நேற்று சென்னை வந்த அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
இன்று இரண்டாவது நாளாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தமிழக தேர்தல் அதிகாரி, அலுவலர்கள் என பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.இதன் பின்னர் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறுகையில், தற்போதைய தமிழக சட்டப்பேரவையின் காலம் வருகின்ற மே 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.மேலும் தேர்தல் பார்வையாளர்களாக பிற மாநில அதிகாரிகளைநியமிக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
80 வயதிற்கு மேற்பட்டோர் தபால் வாக்களிப்பதில் அரசியல் கட்சிகளிடையே மாற்றுக் கருத்துகள் உள்ளன.கூடுதலாக 25000 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படும். கொரோனா காரணமாக தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படும். வாக்குப்பதிவு முடிந்த 2 நாட்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தவும் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…