பள்ளி நேரத்தை மாற்றியமைக்க கோரிக்கை! – தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத் தலைவர்!

Published by
பாலா கலியமூர்த்தி

பள்ளி நேரத்தை காலை 7.30 மணியிலிருந்து 12.30 மணி மாற்றியமைக்குமாறு முதலமைச்சருக்கு கோரிக்கை.

தமிழகத்தில் வெயிலின் தாக்கத்தால் பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படுவதை தடுக்க மே மாதம் தேர்வு முடியும் வரை பள்ளி நேரத்தை காலை 7.30 மணியிலிருந்து 12.30 மணி மாற்றியமைக்குமாறு முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத் தலைவர் இளமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த காலங்களை காட்டிலும் வெயிலின் தாக்கம் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து அதிகமாக உள்ளது. நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலை கருத்தில் கொண்டு மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் இயங்கும் நேரம் சில மாநிலங்களில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் ஆந்திர மாநிலத்தில் காலை 8 மணி முதல் 11 மணி வரை பள்ளி நேரமாக உள்ளது. அதேபோல கர்நாடகாவில் தேர்வு வைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது. வரும் நாட்களில் வெயில் உச்சத்தைத் தொடும் என அஞ்சப்படுகிறது.

சுட்டெரிக்கும் வெளியிலின் தாக்கத்தால் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு சரும நோய்கள் குழந்தைகளுக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடலும் உள்ளமும் சரியாக இருந்தால் மட்டுமே கற்றலும் கற்பித்தலும் சிறப்பாக இருக்கும். எனவே இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பள்ளி நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“புதிய யுஜிசி வரைவு விதிகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுக” – மு.க.ஸ்டாலின் கடிதம்!

“புதிய யுஜிசி வரைவு விதிகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுக” – மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பல்கலைகழக நிதிநல்கைக் குழு தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற…

19 minutes ago

லக்னோ அணி புது கேப்டன் ரிஷப் பண்ட்! அதிகாரப்பூர்வமாக அறிவித்த உரிமையாளர்!

டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட்…

35 minutes ago

விஜயை பரந்தூருக்கு வரவைத்த சிறுவன்.. அப்படி என்ன பேசினார் தெரியுமா?

சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 910 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்…

1 hour ago

கொல்கத்தா மருத்துவர் கொலை : குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை அறிவிப்பு!

கொல்கத்தா : ஆர்.ஜி.கர் என்கிற அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் …

2 hours ago

“நாடகம் ஆடுவதில் நீங்க கில்லாடி ஆச்சே..,” திமுக மீது விஜய் நேரடி அட்டாக்!

காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் இன்று  மேல்பொடவூரில் தனியார் மண்டப வளாகத்தில் பரந்தூர் விமான…

2 hours ago

பரந்தூர் வந்த த.வெ.க தலைவர் விஜய்! விவசாயிகள் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…

3 hours ago