அமைச்சரிடம் சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்த கோரிக்கை.!

ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்த அனுமதிக்க அமைச்சர் கடம்பூர் ராஜூ கோரிக்கை வைத்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடந்து, தியோட்டர் , விளையாட்டு மைதானம், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் ஆகியவை மூடப்பட்டன.நேற்று மத்திய அரசு நாடு முழுவதும் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்துள்ளது. இதைத்தொடந்து, மத்திய அரசு பச்சை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு ஆகிய மண்டலங்களுக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை, தளர்வுகளை அறிவித்துள்ளது.
அதில், தியோட்டர், கல்வி நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் பொது முடக்கத்தின் போது நிறுத்தப்பட்ட படப்பிடிப்புகளை தொடங்குவது பற்றி இன்று தியோட்டர் உரிமையாளர்கள், பட தயாரிப்பாளர்கள் உடன் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனை பின்னர் பேசிய ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, வீடு, அரங்கினுள் சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்த அனுமதி கேட்டுள்ளோம். சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்த அரசிடம் கேட்டு தெரிவிப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
மேலும், சின்னத்திரை படப்பிடிப்புகளை அனுமதிப்பதன் மூலம் 4,000முதல் 5,000 தொழிலார்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள். கொரோனாவை தடுக்க முதல்வர் நிவாரண நிதிக்கு ஃபெப்சி சார்பில் ரூ.10.25 லட்சம் வழங்கப்பட்டது என தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!
February 25, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025