கரூரில் புதிய விமான நிலையம் அமைக்க கோரிக்கை – அமைச்சர் தங்கம் தென்னரசு
கரூரில் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பாக மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தல்.
டெல்லியில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்திய சிந்தியாவை, தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்து இன்று ஆலோசனை மேற்கொண்டார். சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பது தொடர்பான இடத்தை இறுதி செய்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்த ஆலோனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களையும் விரிவாக்கம் செய்யும் பணிகள் குறித்து விமான போக்குவரத்து அமைச்சரிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. சென்னையில் புதிய விமான நிலையம் அமைக்க 2 இடங்கள் பரிசீலினையில் உள்ளன.
ஸ்ரீபெரும்பதூர் அருகே பன்னூர் அல்லது பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பது பற்றி ஆலோசனை நடத்தினோம். புதிய விமான நிலையம் இடம் பற்றி முதலமைச்சருடன் ஆலோசனை நடத்திய பின் இறுதி முடிவு எடுக்கப்படும். என்றும் கரூரில் புதிய விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.