நாய்க்கு பிரேத பரிசோதனை செய்யக் கோரிக்கை – தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Default Image

மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் நாய் உயிரிழந்ததாக உரிமையாளர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், மருத்துவர்கள் மற்றும் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள மணவூர் பகுதியை சேர்ந்த சுமதி என்பவர் தான் 9 வருடங்களாக வளர்த்து வந்த ஜெர்மன் ஷெப்பர்டு எனும் நாய் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதால் கடம்பத்தூரில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகி உள்ளார். அப்பொழுது அவர் அந்த நாய்க்கு கொடுத்த மருந்து காரணமாக அது கோமா நிலையை அடைந்து விட்டதாகவும், அதன் பின்பாக மிகவும் நோய்வய்ப்பட்டு காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதன்பின் அந்த நாயை சோதித்த வேப்பேரி கால்நடை மருத்துவமனை மருத்துவர் நாய்க்கு தவறான மருந்து கொடுக்கப்பட்டதாக தெரிவித்ததை அடுத்து கடம்பத்தூர் மருத்துவருக்கு எதிராக போலீசில் புகார் அளித்துள்ளார் சுமதி.

அதன்பின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவர்களும் தனது நாய்க்கு சிகிச்சை அளிக்க மறுத்ததாகவும், அதன் காரணமாக தனது நாய் கடந்த டிசம்பர் மாதம் இறந்துவிட்டதாகவும் சுமதி தெரிவித்துள்ளார். எனவே நாயின் மரணத்திற்கான உண்மை காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் எனவும், தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் களுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் சுமதியின் மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ் அவர்கள் பிப்ரவரி 1-ஆம் தேதிக்குள் இந்த மனு குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கும் கால்நடை துறை இயக்குனர் உள்ளிட்டோருக்கும் உத்தரவிட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்