நெடுஞ்சாலை திட்டம் குறித்து கோரிக்கை முதல்வர் தகவல்

Default Image

தமிழக முதல்வர் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவோடு நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக்கு பிறகு மாலை மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை முதல்வர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இச்சந்திப்பு குறித்து முதல்வர் பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில்  மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் நிதின் கட்கரியை  இன்று நேரில் சந்தித்து, தமிழகத்திற்கான நெடுஞ்சாலைகள் திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவினை அளித்தேன் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் இச்சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிதின் கட்கரி சென்னையில் ரூ.5,000 கோடி செலவில் இரண்டு அடுக்கு மேம்பாலம் அமைக்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்தார்.இதனால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது குறையும் என்றும் தெரிவித்தார்.

மாண்புமிகு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் @nitin_gadkari அவர்களை இன்று நேரில் சந்தித்து, தமிழகத்திற்கான நெடுஞ்சாலைகள் திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவினை அளித்தேன். pic.twitter.com/tm5sAaLyfT

— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) October 29, 2020

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்