#BREAKING: சென்னை வந்த குடியரசு தலைவர் ..!

டெல்லியில் இருந்து 5 நாள் பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழகம் வந்தார்.
இன்று தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு விழா நடைபெறவுள்ளது. தலைமை விருந்தினராக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துகொள்கிறார். இதனால், ஜனாதிபதி டெல்லியில் இருந்து 5 நாள் பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று தமிழகம் வருகிறார்.
இந்நிலையில், டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு ஜனாதிபதி வந்தடைந்தார். விமானநிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால், முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு அளித்தனர். தலைமை செயலகத்தில் இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தை குடியரசு தலைவர் திறந்து வைக்கவுள்ளார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகையை தொடர்ந்து சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.