குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கன்னியாகுமரிக்கு வருகை
- விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் பொன்விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
- இந்நிகழ்ச்சியில் பங்கேற்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கன்னியாகுமரிக்கு வருகிறார்.
கடந்த 1970-ஆம் ஆண்டு கன்னியாகுமரியில் கடலின் நடுவே விவேகானந்தர் நினைவு மண்டபம் திறக்கப்பட்டது.எனவே இந்த மண்டபத்தின் 50-ம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சியை நடத்த விவேகானந்த கேந்திரா நிர்வாகம் முடிவு செய்தது.
விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் பொன்விழா நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது.இந்த நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறார்.இந்நிகழ்ச்சியில் பங்கேற்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று மதியம் விமானம் மூலம் திருவனந்தபுரம் வருகிறார். பின்னர் திருவனந்தபுரத்தில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வருகிறார்.அங்கு வரும் அவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சார்பாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.இதன் பின்னர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனி படகு மூலம் கடலில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிடுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. .