குடியரசு தினவிழா பாதுகாப்பு.! 5 அடுக்கு பாதுகாப்பு.. 6,800 காவலர்கள்.. டிரோன் பறக்க தடை.!

Default Image

குடியரசு தின விழாவை முன்னிட்டு, சென்னையில் 6800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நாளை மறுதினம் குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது.

இதனை அடுத்து சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

அதன்படி குடியரசு தின விழாவை முன்னிட்டு, சென்னையில் 6800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை மேற்கொள்ள உள்ளனர். சென்னையில் நாளையும், நாளை மறுநாளும் ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி  ட்ரோன்கள் உள்ளிட்டவற்றை பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்