துப்புரவு தொழிலாளி குன்னூரில் குடியரசு தின கொடியேற்றி புது வரலாறு.. பொதுமக்கள் மகிழ்ச்சி.. அங்கிகாரம் அளித்த அதிகாரிக்கு பொதுமக்கள் நன்றி..
- குன்னுார் நகராட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக, குடியரசு தினத்தில், துப்புரவு தொழிலாளர் தேசிய கொடியேற்றினார்.
- இந்த நிகழ்வு குடியரசு தின வரலாற்றில் முதல்முறையாக அமைந்துள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னுார் நகராட்சியில் நேற்று நடந்த குடியரசு தின விழாவில், அந்த நகராட்சியின் மூத்த துப்புரவு தொழிலாளர் பார்வதி தேசிய கொடியேற்றினார். இந்த நிகழ்ச்சியினை நகராட்சி கமிஷனர் பாலு தலைமை வகித்து பேசினார்.நகராட்சி மற்றும், ‘கிளீன் குன்னுார் அமைப்பு’ இணைந்து அவர்கள் சேகரித்த, 8.22 டன் பிளாஸ்டிக் பண்டல்கள் விற்பனை செய்யப்பட்டது. இதில் கிடைத்த தொகையில், பரிசுகள் பொருள்கள் வாங்கி தொழிலாளர்கள், ஒன்பது பேருக்கு பரிசாக வழங்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், குன்னுார் நகராட்சியில் இதுவரை நடந்த குடியரசு தினத்தில், தலைவர்கள் மற்றும் கமிஷனர்கள் உள்ளிட்டோர் தேசிய கொடியேற்றிய நிலையில், தற்போது குடியரசு தின வரலாற்றில் முதல் முறையாக துப்புரவு தொழிலாளர் ஒருவர், தேசிய கொடியேற்றியது, ஊழியர்கள் மற்றும் மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.