குடியரசு தினவிழா கொண்டாட்டம்… ‘சென்னையில் போக்குவரத்து மாற்றம்’ – போக்குவரத்து காவல்துறை!
வரும் 20, 22, 24ம் தேதிகளில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெறுவதை ஒட்டி காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

சென்னை: குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்து சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. வருகின்ற ஜனவரி 20, 22, 24, 26 ஆகிய தேதிகளில் காந்தி சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.
அதன்படி, அண்ணாசதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையம் அருகில் மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறயினர் வெளியிட்டுள்ள அறிக்கையில்”தமிழக அரசு சார்பில் குடியரசு தினவிழா கொண்டாட்டம் வருகிற 26ம் தேதி காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகில் கொண்டாடப்படவிருக்கிறது.
இதனை முன்னிட்டு ஜனவரி 26 மற்றும் ஒத்திகை நாட்களான ஜனவரி 20, 22 மற்றும் 24 ஆம் தேதி ஆகிய மேற்கண்ட 4 தினங்களுக்கு கீழ்கண்ட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, டாக்டர் நடேசன் சாலை மற்றும் அவ்வை சண்முகம் சாலை சந்திப்பு வழியாக காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் ஐஸ் அவுஸ் சந்திப்பு நோக்கி திருப்பி விடப்படும்.லை, இராயப்பேட்டை நெடுஞ்சாலை, இராயப்பேட்டை மணிக்கூண்டு வழியாக பிராட்வே சென்றடையலாம்.
டாக்டர்.பெசன்ட் சாலையிலிருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பெசன்ட் சாலை ரவுண்டானாவில் ஐஸ் அவுஸ் நோக்கி திருப்பி விடப்படும். காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பாரதிசாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் பெல்ஸ் ரோடு நோக்கி திருப்பி விடப்படும்.
வாலாஜாசாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் உழைப்பாளர் சிலை நோக்கி வரும் வாகனங்கள் பெல்ஸ் ரோடு வழியாக திருப்பி விடப்படும். அண்ணாசதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையம் அருகில் மாற்றப்படும்.
குறிப்பாக, அண்ணாசாலை மற்றும் கொடிமர இல்ல சாலை (வாலாஜா பாய்ண்ட்) சந்திப்பிலிருந்து போர் நினைவுச் சின்னம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரத்தை இதோ அறிக்கையில் படித்து தெரிந்து கொள்ளவும்.
???? காமராஜர் சாலையில் நடைபெறும் குடியரசு தினவிழா கொண்டாட்டம் 26.01.2025 மற்றும் ஒத்திகை நாட்கள் 20.01.2025, 22.01.2025, 24.01.2025 ஆகிய 4 தினங்களுக்கு போக்குவரத்து மாற்றம் ????. pic.twitter.com/zkK9nj15Cg
— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) January 18, 2025