சென்னை மெரினாவில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்! முதல்வர், ஆளுநர் கண்டுகளிப்பு.!
குடியரசு தினவிழா கொண்டாட்டத்தில், ஆளுனர் ரவி, முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டனர்.
இன்று குடியரசு தினவிழா இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், சென்னை மெரினாவில் இன்று நடைபெற்ற 74ஆவது குடியரசு தினவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஆளுனர் ரவி நம் தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதையை செலுத்தினார். இந்த குடியரசு தினவிழாவில் அணிவகுப்புகள் மற்றும் பல்வேறு பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முப்படைகளின் அணிவகுப்பு மற்றும் அரசின் திட்டங்கள் பற்றி எடுத்துக்கூறும் ஊர்திகளின் அணிவகுப்பும் நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ரவி இந்த கலைநிகழ்ச்சிகள் மற்றும் அணிவகுப்புகளின் மரியாதையை பார்வையிட்டனர். தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையில் சிறப்பாக பங்காற்றியவர்களுக்கு முதலவர் ஸ்டாலின் விருதுகள் வழங்கி சிறப்பித்தார். விழா நிறைவு பெற்றதையடுத்து ஆளுனர் ரவியை, முதல்வர் ஸ்டாலின் நன்றி கூறி வழியனுப்பி வைத்தார்.