இன்று 75வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை, மெரினாவில் காமராஜர் சாலையில் டிஜிபி அலுவலகம் அருகே உள்ள விழா ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை 8 மணிக்கு ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியேற்றும்போது, ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டது. அத்துடன் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. பின்னர், ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல் படை, தமிழக காவல் துறை , தேசிய மாணவர் படை உள்ளிடோரின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் விருதுகளை வழங்கினார். அதன்படி
காந்தியடிகள் காவலர் பதக்கம் விழுப்புரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய்க்கு வழங்கப்பட்டது.
சென்னை மத்திய நுண்ணறிவு பிரிவு டிஎஸ்பி காசி விசுவநாதனுக்கு காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்பட்டது.
மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் முனியசாமிக்கு காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்பட்டது.
மதுரை மண்டலம் மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் பாண்டியனுக்கு பதக்கம் வழங்கப்பட்டது.
ராணிப்பேட்டை மத்திய நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் ரங்கநாதனுக்கு காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்பட்டது.
நெல் உற்பத்தி திறமைக்கான சி.நாராயணசாமி நாயுடு விருது சேலம் மாவட்டத்தை சார்ந்த பாலமுருகனுக்கு வழங்கப்பட்டது.
செங்குன்றம் காவல் ஆய்வாளர் முனியசாமி காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்பட்டது.
யாசர் அராஃபத், டேனியல் செல்வ சிங் ஆகியோருக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் சிவக்குமாருக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.
சிறந்த காவல் நிலையத்திற்கான விருது மதுரை மாநகர காவல் நிலையம் முதலிடம் பிடித்தது.
சிறந்த காவல் நிலையத்திற்கான நாமக்கல் இரண்டாம் இடம் பிடித்தது.
சிறந்த காவல் நிலையத்திற்கான விருது பாளையங்கோட்டை மூன்றாம் இடம் பிடித்தது.
கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கத்தை பெற்றார் ஊடகவியலாளர் முகமது ஜூபேர்
அரசு பள்ளிக்கு 7 கோடி மதிப்புள்ள நிலத்தை வழங்கிய மதுரை சார்ந்த ஆயி அம்மாளுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது.
டெல்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் (ISRO) 100வது ராக்கெட் பணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இஸ்ரோ சமீபத்தில்…
அமெரிக்கா : கிராமி விருதுகள் இசை உலகில் மிகவும் மதிப்புமிக்க விருது விழாக்களில் ஒன்றாகும். இந்த கிராமி விருது நிகழ்ச்சி…
மும்பை : நேற்று இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடிய 5வது டி20 போட்டியானது, மும்பை…
சென்னை : சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் உச்சம் கண்டு வந்த தங்கம் விலை, இன்று சற்று ஆறுதல்…
சென்னை : இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா எனும் சி.என்.அண்ணாதுரை அவர்களின் 56வது நினைவு தினத்தை முன்னிட்டு…
மதுரை : இந்து கடவுள் முருகனின் அறுபடைவீடுகளில் முதல் வீடாக பார்க்கப்படுவது மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோயில்.…