Republic Day 2024 : தமிழக காவல்துறையினருக்கு குடியரசு தலைவர் விருதுகள்… மொத்த லிஸ்ட் இதோ….

Published by
மணிகண்டன்

நாடு முழுவதும் நாளை குடியரசு தின விழா கோலங்கலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தலைநகர் டெல்லி உட்பட அனைத்து இடங்களிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த குடியரசு தின விழாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருதுகள் ஆண்டுதோறும் அறிவிக்கப்படும்.

அதே இந்த வருடத்திற்கான குடியரசு தலைவர் விருது பெறுவோர் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது . அதில் தமிழக காவல்துறையை சேர்ந்த 3 பேருக்கு குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தினம் 2024: அணிவகுப்புக்கான நேரம் முதல் சிறப்பு விருந்தினர் வரை முழு விவரங்கள்!

காவல்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக, வழங்கப்படும் PSM ( President Medal for Distinguished Service) விருதுக்கு தமிழகத்தில் இருந்து 3 பேர் தேர்வாகியுள்ளனர்.

  • தமிழ்நாடு ஐஜி லலிதா லட்சுமி
  • கமாண்ட் அண்ட் ராஜசேகரன்
  • துணை காவல் ஆய்வாளர் ராயப்பன்

ஆகியோருக்கு நாளை டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் குடியரசு தலைவர் விருதுகளை வழங்க உள்ளார் என கூறப்பட்டுள்ளது.

அதே போல , மெச்சத்தகு சேவைக்கான விருது (MSM – Meritorious Service ) தமிழகத்தை சேர்ந்த 21 காவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. DR லோகநாதன் ஜே, இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ்/ கமிஷனர்.
  2. ஸ்ரநரேந்திரன் நாயர் கே.எஸ்., இன்ஸ்பெக்டர்.
  3. ரூபேஷ் குமார் மீனா, இன்ஸ்பெக்டர்.
  4. அண்ணாதுரை கே, காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்.
  5. செங்குட்டுவன் எஸ், போலீஸ் இன்ஸ்பெக்டர்.
  6. தேவேந்திரன் எம், போலீஸ் இன்ஸ்பெக்டர்.
  7. செல்லதுரை எஸ், சப் இன்ஸ்பெக்டர் ஆஃப் போலீஸ்.
  8. மணி ஏ, போலீஸ் இன்ஸ்பெக்டர்.
  9. ராஜகோபால் ஜி, போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்.
  10. அழகுதுரை எஸ், உதவி கமாண்டன்ட்.
  11. பழனிவேலு ஆர்.எம்., காவல்துறை துணை ஆய்வாளர்.
  12. மோகன்பாபு ஜி, காவல்துறையின் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்.
  13. வெங்கடேசன் ஜி, காவல்துறையின் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்.
  14. ராயமுத்து I, சப் இன்ஸ்பெக்டர் ஆஃப் போலீஸ்.
  15. அனில்குமார் பிஆர், காவல்துறையின் சிறப்பு துணை ஆய்வாளர்.
  16. ஈஸ்வரன் என், காவல்துறையின் சிறப்பு துணை ஆய்வாளர்.
  17. சாலமன் ராஜா ஜி, போலீஸ் இன்ஸ்பெக்டர்.
  18. அருள்முருகன் NV M, காவல்துறையின் சிறப்பு துணை ஆய்வாளர்.
  19. குணசேகரன் A, காவல்துறையின் சிறப்பு துணை ஆய்வாளர்.
  20. சுந்தரம் எல், காவல்துறையின் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்.
  21. வெங்கடேசன் எஸ், காவல்துறையின் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்.

ஆகிய 21 பேருக்கு மெச்சத்தகு சேவைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியாக காவல்துறையினருக்கு 1078 பேருக்கு விருதுகள் , தீயணைப்பு துறையினருக்கு 36 விருதுகள், பாதுகாப்பு படையினருக்கான விருதுகள் என மொத்தமாக 1,132 பேருக்கு குடியரசு தினத்தை முன்னிட்டு விருதுகள் அறிவிக்கபட்டுள்ளன.

Recent Posts

“பேச்சுவார்த்தை நடத்துங்கள்.!” ஜெயம்ரவி விவகாரத்து வழக்கில் நீதிமன்றம் ஆணை.!

சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…

25 mins ago

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கிண்டி மருத்துவமனை! இளைஞர் உயிரிழந்ததால் உறவினர்கள் போராட்டம்!

சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…

44 mins ago

20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ‘மைக் டைசன்’! பரபரப்பான குத்துச்சண்டை ..யாருடன்? எப்போது?

டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…

48 mins ago

“டாக்டர் இல்லை., சிகிச்சை இல்லை, விக்னேஷ் உயிரிழந்து விட்டான்.!” கதறி அழும் அண்ணன்.!

சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…

1 hour ago

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை! இன்றைய நிலவரம் என்ன?

சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…

3 hours ago

இலங்கையில் சாதனை படைத்த NPP.! தனி பெரும்பான்மை நிரூபித்த புதிய அதிபர்.!

கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…

3 hours ago