Republic Day 2024 : தமிழக காவல்துறையினருக்கு குடியரசு தலைவர் விருதுகள்… மொத்த லிஸ்ட் இதோ….
நாடு முழுவதும் நாளை குடியரசு தின விழா கோலங்கலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தலைநகர் டெல்லி உட்பட அனைத்து இடங்களிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த குடியரசு தின விழாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருதுகள் ஆண்டுதோறும் அறிவிக்கப்படும்.
அதே இந்த வருடத்திற்கான குடியரசு தலைவர் விருது பெறுவோர் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது . அதில் தமிழக காவல்துறையை சேர்ந்த 3 பேருக்கு குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினம் 2024: அணிவகுப்புக்கான நேரம் முதல் சிறப்பு விருந்தினர் வரை முழு விவரங்கள்!
காவல்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக, வழங்கப்படும் PSM ( President Medal for Distinguished Service) விருதுக்கு தமிழகத்தில் இருந்து 3 பேர் தேர்வாகியுள்ளனர்.
- தமிழ்நாடு ஐஜி லலிதா லட்சுமி
- கமாண்ட் அண்ட் ராஜசேகரன்
- துணை காவல் ஆய்வாளர் ராயப்பன்
ஆகியோருக்கு நாளை டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் குடியரசு தலைவர் விருதுகளை வழங்க உள்ளார் என கூறப்பட்டுள்ளது.
அதே போல , மெச்சத்தகு சேவைக்கான விருது (MSM – Meritorious Service ) தமிழகத்தை சேர்ந்த 21 காவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- DR லோகநாதன் ஜே, இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ்/ கமிஷனர்.
- ஸ்ரநரேந்திரன் நாயர் கே.எஸ்., இன்ஸ்பெக்டர்.
- ரூபேஷ் குமார் மீனா, இன்ஸ்பெக்டர்.
- அண்ணாதுரை கே, காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்.
- செங்குட்டுவன் எஸ், போலீஸ் இன்ஸ்பெக்டர்.
- தேவேந்திரன் எம், போலீஸ் இன்ஸ்பெக்டர்.
- செல்லதுரை எஸ், சப் இன்ஸ்பெக்டர் ஆஃப் போலீஸ்.
- மணி ஏ, போலீஸ் இன்ஸ்பெக்டர்.
- ராஜகோபால் ஜி, போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்.
- அழகுதுரை எஸ், உதவி கமாண்டன்ட்.
- பழனிவேலு ஆர்.எம்., காவல்துறை துணை ஆய்வாளர்.
- மோகன்பாபு ஜி, காவல்துறையின் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்.
- வெங்கடேசன் ஜி, காவல்துறையின் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்.
- ராயமுத்து I, சப் இன்ஸ்பெக்டர் ஆஃப் போலீஸ்.
- அனில்குமார் பிஆர், காவல்துறையின் சிறப்பு துணை ஆய்வாளர்.
- ஈஸ்வரன் என், காவல்துறையின் சிறப்பு துணை ஆய்வாளர்.
- சாலமன் ராஜா ஜி, போலீஸ் இன்ஸ்பெக்டர்.
- அருள்முருகன் NV M, காவல்துறையின் சிறப்பு துணை ஆய்வாளர்.
- குணசேகரன் A, காவல்துறையின் சிறப்பு துணை ஆய்வாளர்.
- சுந்தரம் எல், காவல்துறையின் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்.
- வெங்கடேசன் எஸ், காவல்துறையின் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்.
ஆகிய 21 பேருக்கு மெச்சத்தகு சேவைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியாக காவல்துறையினருக்கு 1078 பேருக்கு விருதுகள் , தீயணைப்பு துறையினருக்கு 36 விருதுகள், பாதுகாப்பு படையினருக்கான விருதுகள் என மொத்தமாக 1,132 பேருக்கு குடியரசு தினத்தை முன்னிட்டு விருதுகள் அறிவிக்கபட்டுள்ளன.