மிகஜாம் புயல் வெள்ள நீரே இன்னும் சென்னை சுற்றுவட்டார புறநகர் பகுதியில் சில இடங்களில் வடியாமல் இருந்து வரும் நிலையில், எண்ணூர் பகுதியில் வசிப்போருக்கு, குறிப்பாக மீனவர்களுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்தி உள்ளது அப்பகுதியில் தேங்கிய எண்ணெய் கழிவு. இந்த எண்ணெய் கழிவு சுமார் 21 கிமீ தூரத்திற்கு பரவி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் குடியிருப்புகள் அங்குள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எண்ணெய் கழிவு கடலில் கலந்ததால் எண்ணூர் பகுதியில் மீன்கள் செத்து மிதந்தன. இதனால் மீனவர்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். இது குறித்து,உரிய ஆய்வு செய்ய தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒரு குழுவை அமைத்தது. அதன் மூலம் இந்த எண்ணெய் கழிவு எங்கிருந்து வந்தது, இதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பது பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
குழந்தையின் உடலை அட்டைப் பெட்டியில் வைத்து வழங்கிய விவகாரம் – விசாரணை குழு அமைப்பு
எண்ணெய் கசிவுக்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்ய, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் ஆர்.கண்ணன் தலைமையில் இந்த ஆய்வு குழு உருவாக்கப்பட்டது. அதில், விஞ்ஞானி ஜி.சரவணன், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சென்னை மண்டல இயக்குநர் எச்.டி.வரலட்சுமி, கடலோர காவல்படை கமாண்டெண்ட் வி.குமார், அண்ணா பல்கலைக்கழக வேதிப்பொறியியல் துறை பேராசிரியர் வி.டி.பேரரசு ஆகியோர் உள்ளனர் .
இவர்கள் எண்ணெய் கழிவு தேங்கிய பக்கிங்ஹாம் கால்வாய், எண்ணூர் முகத்துவாரம், எண்ணூர் கழிமுகம் உள்ளிட்ட இடங்களில் கழிவு பற்றி ஆய்வு செய்து அதனை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் சமர்ப்பித்தனர். அதில், சென்னை எண்ணூரில் மத்திய அரசுக்கு சொந்தமான சிபிசிஎல் (Chennai Petroleum Corporation Limited) நிறுவனத்தில் இருந்தே இந்த எண்ணெய் கழிவு பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக எண்ணூர் கழிமுகம் பகுதியில் கலந்துள்ளது. சிபிசிஎல் நிறுவனத்திடம் முறையான மழைநீர் வடிகால் இல்லை. கழிவுநீர் வடிகால் குறித்து உரிய வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
எண்ணெய் கழிவு கலந்த பகுதிகள் போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிபிசிஎல் நிறுவனத்தின் ஆயில் பைப்லைன் கசிவு இல்லாததை உறுதிப்படுத்த வேண்டும். அது வரையில் சிபிசிஎல் நிறுவனம் செயல்பட இடைக்கால தடை விதிக்க வேண்டும் . பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட இடங்களில் சிபிசிஎல் நிறுவனம் அறிவியல் பூர்வ ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த குழுவானது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிக்கையை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமானது தேசிய பசுமை தீர்பாயத்திடம் அளிக்க உள்ளது.
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர்…
மும்பை : அதானி குழுமம் மீது முன்னர் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றசாட்டை முன்வைத்தது அப்போது அந்த அறிக்கை…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும் மனைவி சாய்ரா பானுவும் திருமணமாகி 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், இருவரும்…
டெல்லி : அதானி குழுமத் தலைவர் கெளதம் அதானி மீது அமெரிக்க வழக்கறிஞர்கள் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில்,…