தவெக கொடி குறித்த நிருபரின் கேள்வி.. தக்லைஃப் கொடுத்த துரைமுருகன்.!
வேலூர் : த.வெ.க கட்சிக்கொடியை அக்கட்சிதலைவர் விஜய் அறிமுகம் செய்து வைத்தது பற்றிய கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார்.
அமைச்சர் துரைமுருகன் எப்போதுமே தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு நக்கலாக நையாண்டியுட பதில் சொல்லி சிரிக்க வைத்துவிடுவார். அதற்கு உதாரணமாக சமீபத்தில் கூட இதெல்லாம் நமக்கு கைவந்த கலைப்பா” என்கிற வகையில், பிரபல யூடியூபரின் வீடியோவிற்கு கீழே ” “அய்யா எனக்கும் உதவி பண்ணுங்க அய்யா” என கமெண்ட் செய்திருந்தார்.
அவர் செய்திருந்த அந்த கமெண்ட் கூட சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது. இதனையடுத்து, தற்போது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை விஜய் அறிமுகம் செய்து வைத்தது குறித்த கேள்விக்கு நகைச்சுவையாக துரைமுருகன் பதில் அளித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்து வந்தார். அப்போது, செய்தியாளர் ஒருவர் ” விஜய் அவருடைய தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடி அறிமுகம் செய்துள்ளார். அதனை எப்படி பார்க்கிறீர்கள்..?” என்று கேள்வி கேட்டார்.
செய்தியாளர் இந்த கேள்வி கேட்டவுடன் துரைமுருகன் தக்லைஃப் கொடுக்கும் விதமாக ”பறக்கும்போது பார்ப்பேன்” என நக்கலாக கூறினார். துரைமுருகன் இவ்வாறு பேசியதை பார்த்த அங்கிருந்த தொண்டர்கள் மற்றும் செய்தியாளர்கள் பலரும் சிரித்தனர். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram