நாடாளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சி திமுக-மு.க.ஸ்டாலின் அறிக்கை

வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 485 340 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில், வேலூர் வாக்காளர்களுக்கு நன்றி .இந்த வெற்றியின் மூலம் நாடாளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சி திமுக என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
வெற்றியைச் சாத்தியமாக்கிய வேலூர் வாக்காளர்களுக்கும், கழகத் தோழர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கும் நன்றி. இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் தெரிவித்துள்ளார்.