அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்!

Published by
பாலா கலியமூர்த்தி

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை தொடர்பாக சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் கடந்த 22ம் தேதி மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கையின் போது அமைச்சர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது, செந்தில் பாலாஜிக்கு இதய ரத்த குழாயில் அடைப்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, காவிரி மருத்துவமனையில் அவருக்கு பைபாஸ் (இருதய) அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன்பின் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜி தொடர்ந்து புழல் சிறையிலேயே இருந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு  அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, தற்போது மந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மடியில் கனம் இருப்பவர்கள் பயப்படத்தான் வேண்டும்…பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம்!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பித்தப்பையில் கல் இருப்பதால் அதற்கான சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டு வருவதாகவும், நரம்பியல் மருத்துவர்களும் சிகிச்சை அளிக்கும் குழுவில் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வயிறு, குடல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், நெஞ்சகவியல் நிபுணர்கள் பரிசோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. செந்தில் பாலாஜிக்கு மூளை நரம்பிலுள்ள ரத்த கட்டியை கரைக்க மருந்துகள் சிச்சை வழங்கப்படுவதாகவும் கூறப்பட்டது.

இதனிடையே, அமலாத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தொடர்ந்த மனுக்களை சென்னை முதன்மை நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த சூழலில் தான் உடல்நல பாதிப்பு காரணமாக செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தெந்த நாடுகளை சேர்ந்தவர்களுக்கு இனி விசா தேவையில்லை.. சீனா அறிவிப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றம் காவலும் 11-ஆவது முறையாக நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் கடந்த 22ம் தேதி மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் மூளைக்கான எம்.ஆர்.ஐ பரிசோதனையில் வலதுபுறத்தில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. முதுகெலும்பில் வீக்கம் உள்ளதாகவும், செந்தில் பாலாஜிக்கு பித்தப்பை கற்கள் இருப்பதாகவும் நாளடைவில் உணவு உட்கொள்வதை அது குறைக்கும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், இதயத்துக்கு செல்லும் ரத்த குழாயில் கால்சிய படிவு உள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

5 hours ago

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

6 hours ago

RCB vs RR : விராட் கோலி அதிரடி ஆட்டம்! ராஜஸ்தான் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

7 hours ago

RCB vs RR : சொந்தமண்ணில் வெற்றிபெறுமா பெங்களுரு? டாஸ் வென்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

9 hours ago

இது போர் தான்.., இந்தியா – பாகிஸ்தானின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்…

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…

10 hours ago

பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…

11 hours ago