பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் குறித்து வீடியோ கால் மூலம் புகார் அளிக்கலாம்- சென்னை காவல் ஆணையர்!
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் குறித்து வீடியோ கால் மூலம் புகார் அளிக்கலாம் என சென்னை மாநகர காவல் ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை தடுக்கும் வகையில், சென்னை பெருநகர காவல் துணை ஆணையரின் உத்தரவின் பெயரில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு கட்டுப்பாடு அறை எண்ணான 9150250665 என்ற செல்போன் எண் வெளியிடப்பட்டு, கடந்த 7 -ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது.
மேலும், மக்கள் சேவையை விரிவுபடுத்த, சென்னை பெருநகர பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல் ஆணையர் மற்றும் துணை ஆணையர்களை நேரடியாக காணொளி அழைப்பு மூலமாக பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பகல் 12 மணி முதல் 1 மணி வரை அணுகிக்கொள்ளலாம் என சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டு, அறிக்கை வெளியிட்டுள்ளார்.