தமிழகத்தில் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு ! சத்யபிரதா சாஹூ பரிந்துரை
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி மக்களவை தேர்தல் தமிழகம் முழுவதிலும் மிக விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பல முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்தாலும், சில தேர்தல் விதிமீறல்கள் நடைபெற்றது.
இந்நிலையில் தமிழகத்தில் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரை செய்தார்.
தமிழகத்தில் உள்ள பாப்பிரட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகள் மற்றும் பூந்தமல்லி 1, கடலூரில் 1 ஆகிய வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த சத்யபிரதா சாஹூ பரிந்துரை செய்தார்.