சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக பதிவிட்ட ஆயுதப்படை காவலர் பணியிடை நீக்கம்
ஃபேஸ்புக் பக்கத்தில் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக பதிவிட்டதால் ,சென்னையில் பணிபுரிந்துவரும் ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்து பணியிடை நீக்கம் செய்து காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சதீஷ் முத்து என்பவர் சென்னையில் ஆயுதப்படையில் பணிபுரிந்து வரும் காவலர் ஆவார்.இவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சமீபத்தில் நடைபெற்ற சாத்தான்குளம் நிகழ்வு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கமெண்ட் செய்துள்ளார்.இவரது கமெண்ட் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.இந்த கமெண்ட் குறித்து விளக்கம் அளித்த காவலர் ஃபேஸ்புக் ஹேக் செய்யப்பட்டது என்றும் யாரோ தனக்கு தெரியாமல் கமெண்ட் செய்ததாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்து பணியிடை நீக்கம் செய்து காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.மேலும் இது குறித்து விசாரணைக்கு உத்தரவும் பிறப்பித்துள்ளார்.