#BREAKING: சசிகலாவை நீக்கியது செல்லும் – ஓ.பன்னீர் செல்வம்..!
அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் பொதுக்குழு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.
அதிமுகவின் மூத்த தலைவர்களாக இருந்த மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி போன்றவர்களால் முன்மொழியப்பட்டும், வழிமொழியப்பட்டும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக பதவி வகித்த சசிகலாவை நீக்கியது. இந்நிலையில், தன்னை அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா உரிமையியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை ஏற்றுக் கொண்டு இந்த வழக்கை உரிமையியல் நிராகரித்த நிலையில், இதனை எதிர்த்து சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு தற்போது நீதிபதி சுப்பிரமணியன், செந்தில் குமார் அமர்வு முன்பு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதற்கிடையில் ஒன்றை தலைமை பிரச்சனையால் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி என இரு அணிகளாக பிளவுபட்டது. கடந்த ஆண்டு ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.