அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் பேனர்கள் அகற்றம்!

Default Image

அதிமுக தலைமை அலுவலத்துக்கு எடப்பாடி பழனிசாமி வந்து சென்ற ஓரிரு நாட்களில் ஓபிஎஸ் பேனர்கள் அகற்றம்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் படங்களுடன் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டுள்ளது. புதிய பேனர்களில் மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் தற்போதைய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. அதிமுக தலைமை அலுவலத்துக்கு எடப்பாடி பழனிசாமி வந்து சென்ற ஓரிரு நாட்களில் ஓபிஎஸ் பேனர்கள் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

அதிமுக உட்கட்சி பிரச்சனை நிலவி வரும் நிலையில், கடந்த ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தபோது, தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது. இதையடுத்து அதிமுக அலுவலகத்திற்கு வருவாய்துறையினர் சீல் வைத்தனர். இதை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனிடையே, ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் அதிமுக பொதுக்குழு செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து ஈபிஎஸ் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய, இந்த தீர்ப்பும் அவருக்கு சாதமாக வந்தது.

அதாவது, அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தீவு செய்யப்பட்டது செல்லும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனால் ஓபிஎஸ்-க்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. எனவே, அலுவலம் சாவி விவகாரம், அதிமுக பொதுக்குழு செல்லும், இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும், ஓபிஎஸ்-ஸை கட்சியில் இருந்து நீக்கியது செல்லும் என எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததை தொடர்ந்து, சுமார் 70 நாட்களுக்கு பிறகு மீண்டும் அதிமுக அலுவலகம் சென்றிருந்தார். இந்த நிலையில், தற்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் புகைப்படங்கள் அடங்கிய பேனர்கள் அகற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்