கொடிக்கம்பம் அகற்றம்: பாஜகவினர் 120 பேர் மீது வழக்குப்பதிவு!

Published by
பாலா கலியமூர்த்தி

சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு இருந்த கொடிக்கம்பத்தை அகற்றியபோது போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட கரு.நாகராஜன் உள்பட 120 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை ஈசிஆர்  பனையூரில் உள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீடு முன்பு பாஜகவினர் சுமார் 50 அடி உயர பாஜக கொடிக்கம்பத்தை அமைத்துள்ளனர். இந்த கொடிக்கம்பத்தை பாஜகவினர் நெடுஞ்சாலைத்துறையில் அனுமதி வாங்காமல் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அனுமதியின்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு பாஜகவினர் கொடிக்கம்பத்தை அமைத்துள்ளதற்கு அப்பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது பாஜகவினரும் அப்பகுதியில் கூடினர். இதனால் இரவு சுமார் 10 மணி முதல் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இந்த சமயத்தில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இதன்பின் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்களிடம் காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதேவேளையில் பாஜகவினரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தை அகற்றவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அண்ணாமலை வீட்டின் முன் வைக்கப்பட்ட கொடிக்கம்பம் அகற்றம் – 2 பேர் கைது..!

அப்போது, பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் சம்பவ இடத்திற்கு வந்து போலீசாரிடம் மற்றும் மாநகராட்சி அதிகரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும், கொடிக்கம்பத்தை அகற்ற ஜேசிபியை காவல்துறை வரவழைத்த நிலையில், ஆத்திரமடைந்த பாஜகவினர் ஜேசிபி கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது.  அதுமட்டுமில்லாமல், காவல்துறைக்கும் பாஜகவினருக்கு இடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினர் போலீசார் கைது செய்தனர். பாஜகவின் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதன்பின் கொடிக்கம்பம் அகற்றப்பட்டு, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் லாரியில் ஏற்றி சென்றனர். இந்த நிலையில், கொடிக்கம்பத்தை அகற்றியபோது போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட கரு.நாகராஜன் உள்பட 120 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் கானாத்தூர் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

Live: பங்குனி உத்திர திருவிழா முதல்.., சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா வரை.!

சென்னை : இரண்டு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம்…

10 minutes ago

லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு.!

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஏற்பட்ட ஒரு துயரமான சாலை விபத்தில், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி…

19 minutes ago

ஐபிஎல் தொடரில் கிங் கோலியின் புதிய சாதனை.! வேற யாருமே இல்ல..! அப்படி என்ன செய்தார்?

பெங்களூர் : விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இப்போது விராட் ஐபிஎல்லில் தனது பெயரில்…

1 hour ago

தோனி தலைமையில் இன்று களம் காணும் CSK.! வெற்றிப்பாதைக்கு திரும்புமா சென்னை?

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று (ஏப்.11)…

2 hours ago

தமிழ்நாடு வந்தார் அமித் ஷா.., புதிய பாஜக தலைவர் குறித்து ஆலோசனை.!

சென்னை : 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நேற்றிரவு 11:30…

2 hours ago

விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : 2026 சட்டப்பேரவை தேர்தலை கவனத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் செயல்பட்டு வருகிறார்.…

3 hours ago