தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக 35 கடைகளை அகற்றம்!

குமுளி மற்றும் கூடலூர் போலீசார் உதவியுடன் தமிழக குமுளி பேருந்து நிலையத்தில் இயங்கும் 35 கடைகளை ஜேசிபி எந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தினர்.
தமிழக-கேரள எல்லை இணைக்கும் தேனி-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை கேரளாவிற்கு செல்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக, இந்த தேசிய நெடுஞ்சாலை அருகே கம்பம் மேற்கு வனசரக எல்லையை ஒட்டிய பகுதி மற்றும் தேசிய நெடுஞ் சாலையை ஆக்கிரமித்து 35 கடைகள் இயங்கி வந்தது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதத்தில், பொது ஊரடங்கால் முடங்கிய போக்குவரத்தை பயன்படுத்தி, தேனி மாவட்டம் லோயர் கேம்பில் இருந்து, தமிழக குமரி வரையிலான ஆறு கிலோமீட்டர் பாதை அகலப்படுத்தும் பணியை தேசிய நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையடுத்து, தேனி-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணியின் ஒரு பகுதியாக இந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. இந்த கடைகளை அகற்ற 15 நாட்களுக்கு முன்னமே, தேசிய நெடுஞ்சாலை துறையினரால் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனாலும் அகற்றப்படாததால் தேசிய நெடுஞ்சாலை துறையினர் தேனி மாவட்டம் லோயர் கேம்பில் இயங்கும் குமுளி மற்றும் கூடலூர் போலீசார் உதவியுடன் தமிழக குமுளி பேருந்து நிலையத்தில் இயங்கும் 35 கடைகளை ஜேசிபி எந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தினர்.
இதற்கு முன்னதாக கடைகளை இடிப்பதற்கு கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஜேசிபி இயந்திரத்தின் முன் படுத்து இடிக்க விடாமல் தடுத்தனர். இதனை தொடர்ந்து, அவர்களை அப்புறப்படுத்திய பின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கடைகள் இருந்த இடத்தில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, இரு மாநில எல்லை இணைப்பு பகுதியில், போக்குவரத்து நெரிசலை குறைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025