மதுரையில் உள்ள மதுரை அரசு மருத்துவ கல்லூரி நுழைவாயில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை தொடங்கியது.
கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளவர்களுக்கு ரெம்டெசிவர் மருந்தை மருத்துவர்கள் பரிந்துரை செய்து வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் உள்ளமருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த தட்டுப்பாட்டை போக்கும் வகையில் தமிழக அரசு 5 ஊருக்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிலையில், இன்று முதல் மதுரை அரசு மருத்துவ கல்லூரி நுழைவாயில் விற்பனை செய்யப்படுகிறது . தற்போது மதுரைக்கு 500 மருந்துகள் வந்துள்ளது. ஒருவருக்கு அதிகபட்சமாக 6 மருந்துகள் கொடுக்க அனுமதிக்கப்படுகிறது.
மருந்து வாங்க வருபவர்கள் மருத்துவர் பரிந்துரை கடிதம், சிடி ஸ்கேன் உடைய பிரதி மற்றும் ஆதார் அட்டை ஆகியவை எடுத்து வரவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட 5 இடங்களில் ரெம்டெசிவிர் விற்பனை மையம் அமைக்கப்பட்டதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…