சபரிமலைக்கு செல்ல முயன்ற ரெஹானா ஃபாத்திமாவை மதத்தில் இருந்து நீக்கியது வரவேற்கத்தக்கது…! டிடிவி தினகரன்
அரசியல் காரணங்களுக்காக சிலர் சாதி, மத ரீதியாக தூண்டிவிடுகின்றனர் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில்,அரசியல் காரணங்களுக்காக சிலர் சாதி, மத ரீதியாக தூண்டிவிடுகின்றனர்.சபரிமலைக்கு செல்ல முயன்ற ரெஹானா ஃபாத்திமாவை மதத்தில் இருந்து நீக்கியது வரவேற்கத்தக்கது.சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும் .உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார் .