மத வழிபாட்டு தலங்களை திறக்க முடியாது! வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!
மத வழிபாட்டு தலங்களை திறந்தால், கூட்டத்தை கட்டுப்படுத்த இயலாது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், இந்தியா முழுவதும், மக்கள் கூடும் வணிக வளாகங்கள், திரையரங்குகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
சென்னை திருமங்கலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்.கே.ஜலில் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் மற்றும் அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராஜகோபால், வழிபாட்டு தலங்களில் பாதுகாப்பு அளிக்க போதுமான காவலர்கள் இல்லை. இந்த சூழ்நிலைகளில், மத வழிபாட்டு தலங்களை திறந்தால், கூட்டத்தை கட்டுப்படுத்த இயலாது என்றும், இதனால், சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றும், மத்திய அரசு மத வழிபாட்டுக்குரிய திறக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளர். இதனையடுத்து, மத வழிபாட்டு தலங்களை திறக்க கோரிய வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர்.