கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பாதுகாப்பு துறை சார்பில் நிவாரணம்….!!!
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பாதுகாப்பு துறை சார்பில் நிவாரண உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழக வியாபாரிகளுடன் இணைந்து, கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு, பல லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் உணவு பாதுகாப்பு துறை சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மற்றும் மருந்து கட்டுப்பாடு நிர்வாக துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறுகையில், மக்களுக்கு தேவியான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், நிவாரண பொருட்கள் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.