இலங்கைக்கு 2ம் கட்டமாக நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு..!
இன்று இலங்கைக்கு 2ம் கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து கப்பலில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், மக்கள் அன்றாடம் பய்னபடுத்தக் கூடிய பொருட்களின் விலை பெரிதளவு உயந்துள்ளது. இதனால்,மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
இந்த நிலையில், இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் சிரமப்படும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, முதல்கட்டமாக நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, இன்று இலங்கைக்கு 2ம் கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து கப்பலில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 14,700 டன் அரிசி, 250 டன் பால் பவுடர், 60 டன் மருந்து உள்ளிட்ட பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அமைச்சார்கள் கீதா ஜீவன், செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் கொடி அசைத்து அனுப்பி வைத்தனர்.