கடந்த டிசம்பர் மாதம் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக்ஜம் புயல் காரணமாக கனமழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, டிசம்பர் மாதம் 17 மற்றும் 18-ம் தேதி தூத்துக்குடி, நெல்லை,தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்டது.
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி.? முதலமைச்சர் விளக்கம்.!
இந்நிலையில், மிக்ஜம் புயல் மற்றும் தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கான நிவாரண தொகையாக 19,692.67 கோடியும், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண தொகையாக 18,214.52 கோடி என மொத்தம் ரூ 37,907 கோடி தமிழ்நாடு அரசு சார்பில் கோரியுள்ளது.
ஆனால் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இன்னும் நிதி ஒதுக்கப்படாததால் வெள்ள நிவாரண தொகையை உடனடியாக வழங்கக்கோரி இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக எம்.பி.க்கள் குழு சந்தித்தனர். அதன்படி, திமுகவின் மக்களவை குழு தலைவர் டி.ஆர் பாலு தலைமையில் ஜெயக்குமார், வைகோ, சிபிஐ சுப்பராயன், சிபிஎம் நடராஜன், விசிக ரவிக்குமார், முஸ்லிம் லீக் நவாஸ்கனி, கொமதேக சின்ராஜ் ஆகிய 8 எம்.பிக்கள் சந்திப்பில் இடம் பெற்றனர்.
TNPSC: குளறுபடிகளை தடுக்க விசாரணைக்குழு அமைக்க உத்தரவு.!
டெல்லியில் உள்துறை அமித்ஷாவை சந்தித்த பின் திமுக எம்.பி டி.ஆர் பாலு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது” மிக்ஜம் புயல் , தென் மாவட்ட பாதிப்புக்கு தமிழக அரசு கோரிய ரூ.37,000 கோடியை உடனடியாக விடுவிக்க கோரிக்கை வைத்துள்ளோம். வெள்ளம் சேதம் குறித்து எடுத்துரைத்தோம் என கூறினார்.
மேலும், ஜனவரி 15-ஆம் தேதி அன்று டெல்லி திரும்பும் மத்திய அரசின் குழு தரும் அறிக்கை அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் எனவும் மத்திய அரசு தமிழ்நாட்டைப் புறக்கணிக்கவில்லை, மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்துள்ளோம். நிதி வழங்குவது குறித்து 27-ஆம் தேதிக்குள் அறிவிப்பு வெளியாகும் என அமித்ஷா கூறியதாக டி.ஆர் பாலு தெரிவித்தார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…