மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மக்களுக்கு இன்று முதல் நிவாரணம் விநியோகம்..!
மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மக்களுக்கு இன்று முதல் ரேஷன் கடைகள் மூலமாக நிவாரணம் விநியோகம்.
தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், இந்த பருவமழையால் மயிலாடுதுறை மாவட்டம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, தமிழக அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1000 ரூபாய் நிவாரண தொகை அளிப்பதாக அறிவித்து இருந்த நிலையில், நேற்று, மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட 2 வட்டங்களான சீர்காழியில் 99,518 குடும்ப அட்டைதாரர்களுக்கும், தரங்கம்பாடியில் 62,129 குடும்ப அட்டைதாரர்களுக்கும் என மொத்தமாக சுமார் 1,60,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு தோராயமாக 16 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி, இன்று முதல் அந்தந்த குடும்ப அட்டைதாரர்களில் உள்ள நபர்கள் யாரேனும் ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று வாங்கி கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.