தூத்தூர் மீனவ குடும்பங்களுக்கு நிவாரண உதவி உடனே கிடைக்க தமிழக அரசு ஆவனம் செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 2009-ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்ட மீனவ கிராமங்களிலிருந்து கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு ஆழ்கடல் மீன் பிடித்தொழிலுக்கு விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, ‘பியான் புயலில்’ சிக்கி 11 படகுகள் சேதமடைந்தது.குறிப்பாக,8 மீனவர்கள் காணாமல் போனார்கள்.
இந்நிலையில்,பியான் புயலில் காணாமல் போன,தூத்தூர் மீனவ குடும்பங்களுக்கு நிவாரண உதவி உடனே கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் :
பியான் புயல்:
“2009-ஆம் ஆண்டு கன்னியாகுமரி அருகே உள்ள தூத்தூர் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் தீர்த்தம் எனும் பெயருள்ள விசைப்படகில் அரபிக்கடலில் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். அப்போது ஏற்பட்ட பியான் புயலில் கர்நாடக-கேரள பகுதிகளுக்கு இடையே நடுக்கடலில் சிக்கி மீனவர்கள் மாயமாகினர்.
மீனவர்கள் தாசன், ராஜன், அனிஷ், நோமான்ஸ், ஸ்டாலின், கிளீட்டஸ், கிம்மி குட்டன் ஆகியோர் பியான் புயலால் காணமால் போய் 12 ஆண்டுகளுக்கும் மேலாகிறது.
இந்திய ஆதாரச் சட்டம் (1872)-ன் படி ஒருவர் காணவில்லை என்றால், 7 ஆண்டுகள் கழித்துதான் இறப்புச் சான்றிதழ் வழங்கப்படும். அந்த இறப்புச் சான்றிதழைக் கொண்டே நிவாரண உதவிகளுக்கு முயற்சிக்க முடியும். தூத்தூர் மீனவர்கள் கடலில் மாயமாகி 12 ஆண்டுகளாகியும் இன்றுவரை இறப்புச் சான்றிதழ் கூட பெற முடியாமல் அவர்களின் குடும்பத்தினர் அலைக்கழிக்கப்படுகிறார்கள். குடும்பத்தில் பொருளீட்டும் உறுப்பினரை இழந்து இத்தனை ஆண்டுகளான பின்னரும் எவ்வித நிவாரண உதவிகளும் கிடைக்கவில்லை என்பது பெருந்துயரம். இவர்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்க தமிழக அரசு ஆவன செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் கடலுக்குள் மாயமானவர்களுக்கான இறப்புச் சான்றிதழுக்கான கால அவகாசம் மிக நீண்ட காலமாக இருக்கிறது. இந்த நடைமுறையை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இறப்புச் சான்றிதழுக்கான கால அவகாசம் குறைக்கப்பட வேண்டும். ஒருவர் கடலில் காணாமல் போனால், அவரது குடும்பத்திற்கான உடனடி உதவிகள் 15 நாட்களுக்குள் அளிக்கப்பட வேண்டும்.
திமுக ஆட்சி:
மேற்கண்ட ‘பியான்’ பேரிடர் நடந்தபோது திமுக ஆட்சிதான் நடந்துகொண்டிருந்தது. பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகேனும் தங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்குமா என எதிர்பார்த்துக் காத்திருக்கும் தூத்தூர் மீனவ குடும்பங்களுக்கு நிவாரண உதவி உடனே கிடைக்க ஆவன செய்யும்படி தமிழக முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…