கிணற்றில் மூழ்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு.!

MK Stalin

நாமக்கல், ராசிபுரம் அருகே கிணற்றில் மூழ்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற 3 மாணவர்கள் நிலை தடுமாறி கிணற்றில் விழுந்துள்ளனர். கணவாய்ப்பட்டியில் கிணற்றில் மூழ்கிய 3 மாணவர்களை காப்பாற்ற, அருகில் இருந்த 3 பேர் கிணற்றில் குதித்துள்ளனர். பைக்கில் சென்றபோது கிணற்றில் விழுந்த 3 மாணவர்களில் 2 பேர் கிணற்றில் இருந்து மேலே வந்துவிட்டனர். இதில் ஒருவர் உயிரிழந்தார்.

கிணற்றில் விழுந்த மாணவர்களை காப்பற்ற சென்ற 3 பேரும் மூச்சு திணறி உயிரிழந்தனர் சம்பவம் நடைபெற்றுள்ளது. காப்பற்ற சென்ற 3 பேர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் ஆயில்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, நிதியுதவியும் அறிவித்துள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின். அதாவது, கிணற்றில் மூழ்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், சிகிச்சை பெற்றுவரும் இருவருக்கு தலா ரூ.50,000-ம் நிவாரணம் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்