நிவாரண தொகை மற்றும் மளிகை பொருட்களை நாளை முதல் இம்மாத இறுதி வரை பெற்றுக்கொள்ளலாம் – அமைச்சர் சக்கரபாணி
- நாளை முதல் இந்த மாத இறுதிவரை பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.
- மளிகை பொருட்கள் வழங்க யாராவது பணம் பெற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
ரேஷன் கடைகளில் நாளை முதல் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு விநியோகிக்கப்படவுள்ளது. இந்நிலையில், சென்னையில், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், நாளை முதல் இந்த மாத இறுதிவரை பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். கொரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தாவனையான ரூ.2,000-த்தையும் நாளை முதல் பெற்றுக் கொள்ளலாம். ஒரு நியாயவிலை கடைகளில் 75முதல் 200 பேருக்கு தினசரி மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்படும். மளிகை பொருட்கள் வழங்க யாராவது பணம் பெற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.