#BREAKING: நாளை மறுநாள் முதல் கோவில் பணியாளர்களுக்கு நிவாரணத் தொகை – தமிழக அரசு அறிவிப்பு.!
நாளை மறுநாள் முதல் கோவில் பணியாளர்களுக்கு நிவாரணத் தொகையுடன் மளிகை பொருட்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சமீபத்தில் திருக்கோயில்களில் மாதச் சம்பளம் பெறாமல் பணியாற்றும் ஒவ்வொரு திருக்கோயில் ஊழியருக்கும் ரூ.4,000/ உதவித்தொகை, 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்கள் வழங்கப்படும் எனவும் இந்த உதவித்தொகை, 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்கள் திருக்கோயில் பணியாளர் அல்லாத திருக்கோயிலின் மூலம் உரிமம் பெற்றோருக்கும் வழங்கப்படும் என அறிவிக்கபப்ட்டது.
இதன் மூலம் சுமார் 14,000 திருக்கோயில் ஊழியர்கள் மற்றும் திருக்கோயில் மூலம் உரிமம் பெற்ற இதர பணியாளர்கள் பயனடைவார்கள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் இன்று முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரண உதவித்தொகை ரூ. 4000, 10 கிலோ அரிசி, 15 வகை மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், நாளை மறுநாள் முதல் கோவில் பணியாளர்களுக்கு நிவாரணத் தொகையுடன் மளிகை பொருட்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.