#ReleasePerarivalan ! ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக் !
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சிறையில் பேரறிவாளனை விடுவிக்கக்கோரி உள்ள ட்விட்டரில் #ReleasePerarivalan என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகின்றது.
7 பேர் சிறைதண்டனை :
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் 1991-ஆம் ஆண்டு முதல் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.அவர்களை முன்னதாகவே விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை :
இதற்கு இடையில் 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த 2018-ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .ஆனால் இந்த தீர்மானத்துக்கு தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.
தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி பேரறிவாளன் மனு :
மறுபுறம் உச்சநீதிமன்றத்தில் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி பேரறிவாளன் மனு தாக்கல் செய்தார்.இந்த வழக்கு அண்மையில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்பொழுது, பேரறிவாளன் கருணை மனு மீது இரண்டு ஆண்டுகளாக ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பதை ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது. ஆளுநர் சட்டப்படியான முடிவுகளை விரைந்து எடுக்க வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.
பரோலில் பேரறிவாளன் :
இதற்கு இடையில் பேரறிவாளன், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு பரோல் வழங்கக் கோரி அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.அந்த வழக்கில் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்ட நிலையில், மேலும் 30 நாட்கள் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், நவம்பர் 23 ஆம் தேதி வரை பேரறிவாளனின் பரோலை நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. கடந்த 9-ஆம் தேதியுடன் முடிந்த நிலையில், தற்போது நீட்டிக்கப்பட்டது.
ட்ரெண்டாகும் ஹேஷ்டேக் :
ஆகவே இன்று சமூக வலைத்தளமான ட்விட்டரில் பேரறிவாளனை விடுவிக்கக்கோரி #ReleasePerarivalan என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகின்றது.பேரறிவாளனை விடுவிக்கக்கோரி தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சியினர்,திரையுலகினை சார்ந்தவர்கள் என பலரும் இந்த ஹேஷ்டேக்கில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.