“பிரியங்கா காந்தியை உடனே விடுதலை செய்க”- விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம்..!
உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்கிம்பூரில் பாஜக வன்முறை என்று விசிக தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் விவசாயிகள் போராட்டத்தில் கார் மோதியதில் 4 பேர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.மேலும்,விவசாயிகளின் குடும்பத்தை நேரில் சந்திக்க அரசியல் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டும் வருகிறது.இந்த சம்பவத்துக்கு,நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து,நேற்று விவசாயிகளை சந்திக்க லக்கிம்பூர் சென்ற காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.தற்போது அவர் போலீஸ் காவலில் உள்ளார்.மேலும்,அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டதாக பிரியங்கா காந்தி உள்ளிட்ட 11 பேர் மீது உத்தரப்பிரதேச போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில்,பிரியங்கா காந்தியை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
“உபி-லக்கிம்பூரில் பாஜக வன்முறை.பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்தித்து ஆறுதல்கூற சென்ற காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி சட்டத்திற்குப் புறம்பாக கைது செய்து வீட்டுக்காவலில் வைத்திருப்பதை மிக வன்மையாக கண்டிக்கிறோம் . அவரை உடனே விடுதலை செய்க”,என்று பதிவிட்டுள்ளார்.
உபி-லக்கிம்பூரில் பாஜக வன்முறை.பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்தித்து ஆறுதல்கூற சென்ற காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி @priyankavadra சட்டத்திற்குப் புறம்பாக கைது செய்து வீட்டுக்காவலில் வைத்திருப்பதை மிக வன்மையாக கண்டிக்கிறோம் .
அவரை உடனே விடுதலை செய்க. pic.twitter.com/PzAuS2OtC5— Thol. Thirumavalavan (@thirumaofficial) October 5, 2021
இதற்கிடையில்,பிரியங்கா காந்தி கைது மற்றும் லக்கிம்பூர் வன்முறையை கண்டித்து இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர்,அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.