“அண்ணா பிறந்த நாளில் விடுதலை;முதல்வருக்கு நன்றி” – விசிக தலைவர் திருமாவளவன்..!
அண்ணா பிறந்தநாளில் 700 ஆயுள் தண்டனை சிறை கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என முதல்வர் அறிவித்ததற்கு விசிக தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்ட தொடரின் இறுதி நாளான இன்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த அறிவிப்புகளில் ஒன்றாக அண்ணா பிறந்தநாளில் 700 ஆயுள் தண்டனை சிறை கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என அறிவித்துள்ளார்.
இந்நிலையில்,முதல்வரின் இந்த அறிவிப்புக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“தண்டனைக் கைதிகள் 700 பேர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில் விடுவிக்கப்படுவார்களென சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ள மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றி”,என்று தெரிவித்துள்ளார்.
தண்டனைக் கைதிகள்
700 பேர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில் விடுவிக்கப்படுவார்களென சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ள மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றி. @mkstalin #prison #lifeconvicts pic.twitter.com/axYv4w1Rkg— Thol. Thirumavalavan (@thirumaofficial) September 13, 2021