தனித்து போட்டியிடும் பாமக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் பாமக சென்னையில் போட்டியிடும் பாமக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட பாமக முடிவு செய்துள்ளது. சென்னை மற்றும் சேலத்தில் போட்டியிடும் உள்ள பாமகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பாமக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் ஜி.கே மணி, சென்னை மாநகராட்சி 700 ஆடுகளுக்கு 200 வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்தல் பாமக கட்சிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக அமையும். இந்த தேர்தலில் பாமக மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. புதுமுகம், இளைஞர்கள் வழக்கறிஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சேலம் மாவட்டத்தில் 60 வார்டுகளுக்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளோம். பிற மாவட்டங்களில் விரைவில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும். தனி தொகுதிகளில் எஸ்சி பிரிவினருக்கு வாய்ப்பு அளித்துள்ளோம் என தெரிவித்தார்.