உடற்பயிற்சி கூடங்கள் செயல்படுவதற்கான நெறிமுறைகள் வெளியீடு.
தமிழகத்தில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் உடற்பயிற்சிக் கூடங்களை திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனுமதி அளித்துள்ளார். தற்போது அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருக்கக் கூடிய உடற்பயிற்சி கூடங்கள் தொடர்ந்து மூடியே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில்,தமிழ்நாடு உடற்பயிற்சியக உரிமையாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நல சங்கத்தின் (Tamil Nadu Gym Owners & Trainerswelfare Association) சார்பில் அதன் நிர்வாகிகள், தமிழ்நாட்டில் உள்ளஉடற்பயிற்சியகங்களை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அக்கோரிக்கையினை பரிசீலித்த முதலமைச்சர் மத்திய அரசு தனியார் உடற்பயிற்சிக் கூடங்களை திறக்க ஆகஸ்ட் 5 தேதி முதல் அனுமதி அளித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் தனியார் உடற்பயிற்சி கூடங்கள் (stand alone only), 50 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் 10.8.2020 முதல் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
ஒருவர் உடற்பயிற்சி செய்யும் உபகரணங்களை மற்றவர் பயன்படுத்துவதற்கு முன்பு கிருமிநாசினி கொண்டு கட்டாயம் சுத்தப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு உடற்பயிற்சி நிலையங்களில் ஏசி பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், ஆனால் அதன் வெப்பநிலை 24 டிகிரியிலிருந்து 30 டிகிரிக்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…