தமிழகத்தில் வலுவான நிலையில் திமுக.! வலுபெறுமா அதிமுக.? கருத்துக்கணிப்புகள் இதோ…
மக்களவை தேர்தல்: இந்தியா முழுக்க உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி, இன்றுடன் (ஜூன் 1) நிறைவு பெற்றது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள் என பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா (I.N.D.I.A) கூட்டணியும் எதிரெதிர் துருவங்களாக களமிறங்கி உள்ளன.
கடந்த 2019 மக்களவை தேர்தலில், பாஜக தனித்து 303 இடங்களை கைப்பற்றி இருந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஒட்டுமொத்தமாக 352 இடங்களை கைப்பற்றி இருந்தது. காங்கிரஸ் தனித்து 52 இடங்களை மட்டுமே வென்று இருந்தது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மொத்தமாக 91 இடங்களை மட்டுமே பெற்று இருந்தது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளையும், அதிமுக ஒரு தொகுதியையும் வென்று இருந்தது.
இந்நிலையில், இன்று மலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவுபெற்றது. அதனை அடுத்து தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடு விதிகளின் படி, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்துக்கான தேர்தல் கருத்துக்கணிப்புகளை பல்வேறு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.
INDIA TODAY வெளியிட்ட கருத்து கணிப்பின் படி, தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில், இந்தியா (திமுக) கூட்டணி 33 முதல் 37 இடங்களை கைப்பற்றும் என்றும், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) 2 முதல் 4 இடங்களை கைப்பற்றும் என்றும், அதிமுக 0 முதல் 2 இடங்களை கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
CNN நியூஸ் வெளியிட்ட கருத்து கணிப்பின் படி, தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில், இந்தியா (திமுக) கூட்டணி 36 முதல் 39 இடங்களை கைப்பற்றும் என்றும், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) 1 முதல் 3 இடங்களை கைப்பற்றும் என்றும், அதிமுக 2 இடங்களை கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
TV 9 வெளியிட்ட கருத்து கணிப்பின் படி, தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில், இந்தியா (திமுக) கூட்டணி 35 இடங்களை கைப்பற்றும் என்றும், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) 4 இடங்களை கைப்பற்றும் என்றும், அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெரும் நிலையில் இல்லை என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
ஏபிபி வெளியிட்ட கருத்து கணிப்பின் படி, தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில், இந்தியா (திமுக) கூட்டணி 37 முதல் 39 இடங்களை கைப்பற்றும் என்றும், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) 2 முதல் 4 இடங்களை கைப்பற்றும் என்றும், அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெரும் நிலையில் இல்லை என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
ஜான்கி பாத் வெளியிட்ட கருத்து கணிப்பின் படி, தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில், இந்தியா (திமுக) கூட்டணி 34 முதல் 38 இடங்களை கைப்பற்றும் என்றும், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) 5 இடங்களை கைப்பற்றும் என்றும், அதிமுக 1 இடத்தை கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.